எந்தவொரு முஸ்லிம் தலைவரும் தெரிந்துக் கொண்டே பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்திருக்கமாட்டார்கள்
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணைக்கு வழிவிடும் வகையில் நீங்களும் ஏனைய அமைச்சர்களும் பதவி விலகினீர்கள். அதேவேளை இது சம்பந்தமாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவிலும் நீங்கள் அங்கத்துவம் வகிக்கின்றீர்கள். இது ஒன்றுக்கொன்று முரணானதாகத் தெரியவில்லையா?
உயிர்த்த ஞாயிறு சம்பவம் சம்பந்தமாக விசாரணை நடாத்துவது எமது செயற்பாடல்ல. மாறாக இது எவ்வாறு நடந்தது, இந்த விடயத்தில் எங்கே தவறு நடந்தது என்பதை ஆராய்வதே இதன் முக்கிய…