அடக்கம் செய்யப்பட்டிருந்த ஜனாஸா மர்ம நபர்களால் தோண்டியெடுப்பு

முஸ்லிம் பொது மயா­னத்தில் அண்­மையில் அடக்கம் செய்யப் பட்­டி­ருந்த ஜனாஸா ஒன்று சில மர்ம நபர்­களால் தோண்டி யெடுக்­கப்­பட்டு மற்­று­மொரு இடத்தில் கைவி­டப்­பட்­டி­ருந்த சம்­பவம் ஒன்று நேற்­று­முன்­தினம் அதி­காலை கலே­வெல பிர­தேச செய­லகப் பிரி­வி­லுள்ள பல்­லே­வெல என்ற கிரா­மத்தில் இடம் பெற்­றி­ருப்­ப­தாக பொலிஸார் தெரி­வித்­தனர். பிர­தே­ச­மெங்கும் பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்ளது. குறித்த முஸ்லிம் பொது மயா­னத்தைச் சுற்றி முட்­கம்பிப் பாது­காப்பு வேலிகள் அமைக்­கப்­பட்டு பிர­தான நுழை­வா­யிலும் பூட்டுப் போடப்­பட்டு…

முஸ்லிம் அடக்குமுறை ஒழிக்கப்படாமல் அமைச்சுகளை பொறுப்பேற்க மாட்டோம்

என்­மீது எந்தக் குற்­றச்­சாட்டும் முன்­வைக்­கப்­ப­டாத நிலையில் ஏன் இரா­ஜி­னாமா செய்­தீர்கள் என்று கேட்­கின்­றனர். முஸ்லிம் சமூ­கத்­துக்கு எதி­ரான அடக்­கு­முறை முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட வேண்டும். அதற்­கான உத்­த­ர­வாதம் கிடைக்­கப்­பெ­றாமல், மீண்டும் அமைச்சுப் பத­வி­களை பொறுப்­பேற்­பதில் எந்தப் பிர­யோ­ச­னமும் இல்லை என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார். ‘பிரஜா ஜல அபி­மானி’ வேலைத்­திட்­டத்தின் கீழ் நேற்று முன்­தினம் கண்டி, தெல்­தோட்­டையில் கிரா­மிய குடிநீர் வழங்கல் திட்­டங்­களை…

சில மத தலைவர்களின் அறிவிப்புகள் வன்முறையை தூண்டுபவை

முஸ்­லிம்­க­ளுக்கு  எதி­ரான  தாக்­கு­தல்கள்  பற்­றிய  அறிக்­கைகள்  தொடர்பில்  கவ­லை­ய­டை­கின்றேன். சில  மதத்­த­லை­வர்­களின்  அண்­மைய  அறி­விப்­புக்கள்  வன்­மு­றையைத் தூண்­டு­ப­வை­யாக  உள்­ளன.  இது­தொ­டர்பில்  ஆரா­யப்­பட வேண்­டி­யுள்­ள­தென்று ஐக்­கிய நாடுகள் ஸ்தாப­னத்தின் மனித உரி­மைகள் ஆணைக்­குழு சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது. அத்­துடன், பயங்­க­ர­வாத  தடுப்பு  செயற்­பா­டுகள்  தேவைப்­ப­டு­வன  ஆயினும்,  அவ­ச­ர­கா­லச்­சட்டம்  குறு­கி­ய­கால  எல்­லையைக் கொண்­ட­தாக  இருக்க  வேண்டும்.  சமூ­கத்­த­லை­வர்கள்  ஒன்­றி­ணைந்து  அனைத்து …

சூறா தௌபா கூறும் ‘கொல்’ என்பதை முறையாக விளக்குவோம்

2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6 ஆம் திகதி வெளி­யான ராவய பத்­தி­ரி­கையில் எஸ்.நந்­தலால் என்­பவர் குர்­ஆனில் பழைய, புதிய என இரு­வ­கைகள் உள்­ள­னவா எனக் கேட்­டி­ருந்தார். அண்­மையில் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் அல்­குர்­ஆனின் சிங்­கள மொழி­பெ­யர்ப்பைக் கொடுத்த பிற­குதான் அது நந்­த­லாலின் கைக­ளுக்கும் பார்­வைக்கும் வந்­தி­ருக்­கி­றது.