அஸ்கிரிய மகாநாயக்க தேரருக்கு எதிராக இரண்டு முறைப்பாடுகள்
முஸ்லிம்களுடன் தொடர்புபடுத்தி அஸ்கிரிய மகாநாயக்க தேரர் வரக்காகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் அண்மையில் வெளியிட்டதாகக் கூறப்படும் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்பில் இரு முறைப்பாடுகள் பொலிஸ் தலைமையகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அஸ்கிரிய மகாநாயக்க தேரரின் கருத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரியே இந்த முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் அவ்விரு முறைப்பாடுகளும் பொலிஸ் தலைமையகத்தால் பொலிஸ் சட்டப் பிரிவிடம் கையளிக்கப்பட்டுள்ளன. அண்மையில் கண்டி - தொடம்வல…