ஹஜ் சட்டமூலம் நிறைவேற்றப்படுமா?
எமது நாட்டின் ஹஜ் ஏற்பாடுகளும், ஹஜ் தொடர்பான விடயங்களும் ஒரு சட்ட வரம்புக்குள் கொண்டுவரப்பட வேண்டும் எனும் கோரிக்கைகள் பல வருடங்களாக முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந் நிலையில் இதற்கான ஏற்பாடுகளை முஸ்லிம் சமய விவகார அமைச்சு, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் அரச ஹஜ் குழு என்பன முன்னெடுத்திருந்தன. ஹஜ் விவகாரத்துக்கென தனியான சட்டமொன்றினை இயற்றி பாராளுமன்றில் அங்கீகரித்துக் கொள்வதற்கு அமைச்சரவையும் அங்கீகாரம் வழங்கியிருந்தது.
ஹஜ்ஜுக்கான சட்ட வரைபொன்று…