டாக்டர் சாபியை தடுத்து வைத்திருப்பது நியாயமற்றது

டாக்டர் சேகு சஹாப்தீன் மொஹமட் சாபி தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்­பிலோ அல்­லது வேறு ஏதா­வது பயங்­க­ர­வாதக் குழு­விலோ அங்­கத்­த­வ­ராக உள்ளார் என்­பது தொடர்பில் எந்­தவோர் உள­வுப்­பி­ரி­வுக்கும், பாது­காப்புப் பிரி­வுக்கும் தக­வல்கள் கிடைக்­க­வில்லை. அதனால் டாக்டர் சாபியை பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் தொடர்ந்தும் குற்­ற­வியல் விசா­ரணைத் திணைக்­க­ளத்தில் தடுத்து வைத்­தி­ருப்­பது நியா­ய­மற்­றது என குற்­ற­வியல் விசா­ரணைத் திணைக்­களம் பாது­காப்புச் செய­லா­ள­ருக்கு கடி­த­மொன்­றினை அனுப்பி வைத்­தி­ருப்­ப­தாக அத்­தி­ணைக்­க­ளத்தின்…

அன்வர் இப்­ராஹீம் இலங்கை வரு­கிறார்

மலே­சி­யாவின் முன்னாள் பிரதிப் பிர­த­மரும் அடுத்த வருடம் அந்­நாட்டின் பிர­த­ம­ராகப் பத­வி­யேற்­க­வுள்­ள­வ­ரு­மான அன்வர் இப்­றாஹீம் விரைவில் இலங்­கைக்கு வருகை தர­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.தேசிய ஐக்­கி­யத்­துக்­கான பாக்கீர் மாக்கார் நிலை­யத்தின்ஏற்­பாட்டில் எதிர்­வரும் செப்­டம்பர் மாதம் நடை­பெ­ற­வுள்ள பாக்கீர் மாக்கார் நினைவுப் பேருரை நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்­பு­ரை­யாற்­று­வ­தற்­கா­கவே அவர் இலங்­கைக்கு வருகை தர­வுள்­ள­தாக அறிய முடி­கி­றது. மலே­சி­யாவின் முன்னாள் பிரதிப் பிர­த­ம­ரா­கவும் எதிர்க்­கட்சித்…

சட்டவிரோத கைதுகளை உடன் நிறுத்துங்கள்

இலங்கை மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழு­வுக்கு அண்­மைக்­கா­ல­மாக பல சட்­ட­வி­ரோத கைதுகள் தொடர்­பாக முறைப்­பா­டுகள் கிடைக்­கப்­பெற்­றுள்­ளன. கலா­சாரம் பற்­றிய தவ­றான புரி­தல்கள் கார­ண­மா­கவும் பொது­மக்கள் சந்­தேகம் வெளி­யிட்­டதன் கார­ண­மா­கவும் இவ்­வா­றான கைதுகள் இடம்­பெற்­றுள்­ளன. எனவே கைது செய்­யப்­ப­டும்­போது அந்தக் கைதுக்­கான உறு­தி­யான அத்­தாட்சி இருக்க வேண்டும். அப்­போதே அது தொடர்பில் முறை­யான விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க முடியும். இவ்­வா­றல்­லாது கைதுகள் இடம்­பெ­றக்­கூ­டாது என இலங்கை மனித உரி­மைகள் ஆணைக்­குழு பதில் பொலிஸ்…

பொதுபலசேனாவின் கண்டி மாநாடு குறித்து முஸ்லிம்கள் அச்சத்தில் : ஜனாதிபதி, பிரதமரிடம் நேரில் முறையீடு

பொது­ப­ல­சேனா அமைப்பு பல தேசிய அமைப்­பு­க­ளுடன் இணைந்து கண்­டியில் எதிர்­வரும் 7 ஆம் திகதி ஏற்­பாடு செய்­துள்ள மாநாடு தொடர்பில் கண்டி மற்றும் அயல் பிர­தே­சங்­களைச் சேர்ந்த முஸ்­லிம்கள் பெரும் அச்­ச­முற்­றுள்­ள­தா­கவும் இது தொடர்பில் ஜனா­தி­பதி, பிர­தமர் மற்றும் பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்­ச­ருடன் கலந்­து­ரை­யா­டி­யுள்­ள­தா­கவும் அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரி­வித்தார். கண்­டியில் பொது­ப­ல­சேனா ஏற்­பாடு செய்­துள்ள மாநாடு தொடர்பில் கருத்து தெரி­விக்­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார்.…