ஒரே நாடு ; ஒரே சட்டம்?
இலங்கை இயற்கை வளங்களை நிறைவாகக் கொண்ட ஓர் அழகிய நாடு. ஒரு சிறிய நாடாக இருந்த போதும் பௌத்தம், ஹிந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் என்ற நான்கு மதங்களைக் கொண்ட நாடு அது. அதனது இந்தப் பன்மைத்துவம் பலவீனமாக அன்றி நாட்டைக் கட்டியெழுப்பும் பலமாகவே கொள்ளப்பட வேண்டும்.
உண்மையில் ஒரு நாடு ஒரு சட்டம் என்பது நல்லதொரு அழகான கோஷம் என்பதில் சந்தேகமில்லை. ஒரு நாட்டின் அனைத்து சமூகங்களும் இணக்கப்பாட்டுடன் வாழ்வதில் அதற்கு ஒரு பங்களிப்பு இருக்கிறது என்பதிலும் சந்தேகமில்லை. இலங்கையில் முஸ்லிம் சமூகமும்…