உழ்ஹிய்யா நடைமுறை : சில ஆலோசனைகள்
ஒவ்வொரு வருடம் துல்ஹஜ் மாதம் முஸ்லிம்கள் உழ்ஹிய்யா எனும் கிரியையை செய்து வருகின்றனர். இதன் மூலம் குறிப்பாக வறிய குடும்பங்களும், பொதுவாக அனைவரும் பயனடைகின்றனர்.
உழ்ஹிய்யா கொடுக்குமாறு இஸ்லாம் எம்மைத் தூண்டியுள்ளது. நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் “யார் வசதியிருந்தும் அறுத்துப் பலியிடவில்லையோ அவர் நமது தொழுகை நடைபெறும் இடத்தை நெருங்கவும் வேண்டாம்” (அஹ்மத், இப்னு மாஜா).
பர்ரா இப்னு ஆஸிப் (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக…