உப்புச் சப்பற்ற உள்ளடக்கங்களுடன் வெளிவந்துள்ள சந்திரகாந்தனின் “உயிர்த்த ஞாயிறு’ நூல்

சர்­வ­தேச ரீதி­யாக அதிர்­வ­லையை ஏற்­ப­டுத்­திய ஈஸ்டர் தீவி­ர­வாதத் தாக்­கு­தல்கள் தொடர்பில் இரா­ஜாங்க அமைச்சர் சிவநேச­து­ரை சந்­தி­ர­காந்தன் நூல் ஒன்றை வெளி­யிட்­டுள்ளார். அந்த நூலின் பெயர் ‘ஈஸ்டர் படு­கொலை - இன, மத நல்­லி­ணக்கம் - அறி­தலும் புரி­தலும்’ என்­ப­தாகும். இந்த நூல் 23.03.2024ஆம் திகதி மட்­டக்­க­ளப்பில் வெளி­யிட்டு வைக்­கப்­பட்­டது.

ஞானசாரருக்கு வக்காலத்து வாங்கும் ஞானசூனியர்கள்

கொழும்பின் உயர்­நீ­தி­மன்ற நீதி­ய­ரசர் ஆதித்­திய பத­பென்­டிகே எனும் ஒரு பௌத்தர் பௌத்த துற­வி­யென்ற போர்­வைக்குள் மறைந்­தி­ருந்து கல­கக்­காரன் நார­தன்­போன்று இலங்­கை­யெங்கும் இன­வா­தத்தை வளர்த்துக் கல­வ­ரங்­க­ளையும் ஏற்­ப­டுத்­திய அர­சியல் பௌத்­தத்தின் துஷ்டக் குழந்தை ஞானசா­­ர­ருக்கு நான்கு வருடக் கடூ­ழியச் சிறையும் நூறா­யிரம் ரூபா அப­ரா­தமும் தண்­ட­னை­க­ளாக விதித்­துள்­ளமை இலங்­கையின் சுதந்­தி­ரத்­துக்குப் பின்­னுள்ள வர­லாற்றில் ஒரு மைல்கல் எனக் கரு­தலாம்.

இஸ்ரேலின் மேற்கு ஆசியாவை நோக்கிய போர் அச்சுறுத்தல் குறித்து இலங்கையர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

தற்­போ­தைய இஸ்­ரே­லிய அர­சாங்கம் பலஸ்­தீனைத் தாண்டி அதன் உட­னடி அண்டை நாடு­க­ளுக்கு இரா­ணுவ ஆக்­கி­ர­மிப்­பு­களை விரி­வு­ப­டுத்­து­வதால், முழு மேற்­கா­சிய பிராந்­தி­யத்­தையும் மூழ்­க­டிக்கும் உட­னடி யுத்த அச்­சு­றுத்தல் குறித்து இலங்கை அர­சாங்­கத்­திற்கு உல­க­ளா­விய நீதிக்­கான இலங்கை ஊட­க­வி­ய­லா­ளர்கள் (SLJGJ) எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளனர்.

ஜீவனின் மன்னிப்பை ஏற்கமுடியாது!

‘‘கொவிட் 19 வைரஸ் தொற்­றினால் உயி­ரி­ழந்­த­வர்­களின் ஜனா­ஸாக்கள் கடந்த அர­சாங்­கத்­தினால் பல­வந்­த­மாக தகனம் செய்­யப்­பட்­டமை தவறு என்­பதை ஏற்­றுக்­கொள்­கிறேன். முஸ்லிம் சமூ­கத்­திடம் இதற்­காக ஓர் அமைச்சர் என்ற ரீதியில் மன்­னிப்புக் கோரு­கிறேன்’’ என்று கூறி நீர்­வ­ழங்கல் மற்றும் தோட்ட உட்­கட்­ட­மைப்பு அபி­வி­ருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் அமைச்­ச­ரவைப் பத்­தி­ர­மூ­டாக மன்­னிப்பு கோர முயற்­சிப்­பதை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் ஏற்க மறுத்­துள்­ளது.