கிண்ணியா கொவிட் மையவாடி சுகாதார அமைச்சின் அனுமதிக்காக காத்திருக்கிறோம்

சுகா­தார அமைச்சும், கொவிட் செய­ல­ணியும் அனு­ம­தித்தால் கிண்­ணியா வட்­ட­ம­டுவில் கொவிட் ஜனா­ஸாக்­களை நல்­ல­டக்கம் செய்­வ­தற்கு நாங்கள் தயா­ராக இருக்­கின்றோம். இதற்­கான அனு­ம­தியை பிர­தேச செய­லாளர் மற்றும் அர­சாங்க அதிபர் என்போர் வழங்­கி­யுள்­ளனர். சுகா­தார அமைச்­சி­ட­மி­ருந்தே அனு­மதி பெறப்­பட வேண்­டி­யுள்­ளது.

காதி நீதி­மன்ற கட்­ட­மைப்பை இல்­லா­தொ­ழிக்கும் அமைச்சரவை தீர்மானத்தை மறுபரிசீலிக்க கோரிக்கை

காதி நீதி­மன்ற கட்­ட­மைப்பை இல்­லா­தொ­ழிக்கும் அமைச்­ச­ரவை தீர்­மானத்தை எதிர்த்து காதி நீதி­ப­திகள் போரம், சிவில் சமூக அமைப்­புகள் மற்றும் உல­மாக்கள் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றனர். காதி நீதி­ப­திகள் போரம் அண்­மையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரவூப் ஹக்­கீமை அவ­ரது காரி­யா­ல­யத்தில் சந்­தித்து பேச்சு வார்த்தை நடத்­தி­யது.

அமைச்சரவையின் தீர்மானம் மறுபரிசீலனைக்குட்படுமா?

காதி நீதி­மன்ற முறையை இல்­லா­தொ­ழிப்­பது தொடர்பில் அமைச்­ச­ரவை எடுத்­துள்ள தீர்­மானம் பலத்த சர்ச்­சையை தோற்­று­வித்­துள்­ளது. இது தொடர்பில் சூடான வாதப்­பி­ர­தி­வா­தங்கள் சமூ­கத்தில் மேலெ­ழுந்­துள்­ளன. சமூக வலைத்­த­ளங்­களில் இது தொடர்பில் இரு கருத்­து­க­ளுக்கு ஆத­ர­வா­ன­வர்­களும் பல்­வேறு கருத்­துக்­களை முன்­வைத்து தமக்குள் முரண்­பட்டுக் கொள்­வதை காண­மு­டி­கி­றது.

தொல்பொருளின் பெயரால் முன்னெடுக்கப்படும் திட்டமிட்ட காணி அபகரிப்பு

காணிகள் என்­பது அவற்றின் உரி­மை­யா­ளர்­க­ளு­டைய வாழ்க்­கையின் ஓர் அங்­க­மாகும். அவர்­க­ளு­டைய நிலத்தின் உரிமை அவர்­க­ளு­டைய அடை­யா­ள­மாகும். அடிப்­படை மனித உரி­மை­யாக நோக்­கப்­பட வேண்­டிய காணி­களை மாறி­மாறி ஆட்­சிக்கு வரு­கின்ற ஆட்­சி­யா­ளர்­களும் அரச அதி­கா­ரி­களும் மக்­க­ளுக்கு வழங்­குதல், மக்­க­ளிடம் இருந்து பெற்றுக் கொள்­ளுதல் அல்­லது மீள்­கு­டி­ய­மர்த்­துதல் போன்ற செயற்­பா­டு­களின் போது மக்­களின் உணர்­வு­க­ளுக்கு மதிப்­ப­ளிக்­காது வெறு­மனே இலாபம் ஈட்­டக்­கூ­டிய ஒரு பண்­ட­மா­கவே பார்க்­கின்­றனர்.