மன்னிப்புக் கோரினால் மாத்திரம் போதுமா?

கொவிட் 19 தொற்­றினால் உயி­ரி­ழந்த முஸ்­லிம்­களின் ஜனா­ஸாக்­களை எரித்­த­மைக்­காக மன்­னிப்புக் கோரும் தீர்­மா­னத்­திற்கு அமைச்­ச­ரவை அங்­கீ­கா­ர­ம­ளித்­துள்ள விவ­காரம் தற்­போது தேசிய அர­சி­யலில் மிகுந்த கவ­ன­யீர்ப்பைப் பெற்­றுள்­ளது.

அஹ்னாப் ஜஸீம் : அச்சுறுத்துவது யார்? எதற்காக?

அஹ்னாப் ஜஸீம், உலக அளவில் மனித உரிமை செயற்­பாட்­டா­ளர்கள் உட்­பட பலரால் அறி­யப்­படும் ஒரு பெயர். இளம் கவிஞர், ஆசி­ரி­ய­ரான இவர் உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்­களின் பின்னர் அதா­வது அத்­தாக்­குதல் நடந்து ஒரு ­வ­ரு­டத்தின் பின்னர் அத­னுடன் தொடர்­பு­ப­டுத்தி கைது செய்­யப்பட்டார். பின்னர் தன்­னிடம் கற்ற மாண­வர்­க­ளி­டையே அடிப்­ப­டை­வா­தத்தை தூண்டி, பிற மதத்­த­வர்கள் மீது பகைமை உணர்வை தூண்­டி­ய­தாக குற்றம் சாட்­டப்­பட்டார்.

மறக்கப்படும் இனவாத வரலாறும் உயிர்த்த ஞாயி­று தாக்குதலும்

சிங்­க­ள­வர்­களின் உணர்­வு­க­ளுக்கு மதிப்­ப­ளித்து வந்த ராஜ­ப­க்ஷாக்­களின் இன­வாத முழக்­கங்கள் பொரு­ளா­தார சீர­ழி­வுடன் ஓய்­விற்கு வந்­துள்­ளது. நாடு அதல பாதா­ளத்­திற்குள் விழ ஊழல், துஷ்­பி­ர­யோகம் செய்த அதே பங்­க­ளிப்­பினை, இன­வா­தமும் ஆற்­றி­யி­ருக்­கின்­றது. போர் முடி­வோடு பொரு­ளா­தார சுபீட்­சத்­தினை நோக்கி சிங்­க­ள­வரின் கவனம் திரும்பி சமன்­பாடு மாறு­ப­டு­வதைத் தவிர்க்க ஆரம்­பிக்­கப்­பட்ட முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான இன­வாத நாட்­டியம், உயிர்த்த ஞாயி­று­ தாக்­கு­த­லோடு பிசு பிசுத்துப் போயுள்­ளது.

பரீட்சைத் திணைக்­க­ளமே மாணவர் உரி­மை­களை மீற­லாமா?

இலங்­கையில் வாழும் மூவின மக்­களில் பெரும்­பான்­மை­யினர் புரி­த­லு­டனும், விட்டுக் கொடுப்­பு­டனும் ஒவ்­வொ­ரு­வ­ரி­னதும் சமயம், மொழி, கலா­சாரம் என்­ப­ன­வற்றை அங்­கீ­க­ரித்தும் வாழ்ந்து வந்­துள்­ள­மைதான் வர­லா­றாகும்.