20 ஐ ஆதரித்த எம்.பி.க்களின் முறைப்பாடு போலி நாடகம்

ஞான­சார தேருக்கு எதி­ராக முஸ்லிம் எம்.பி.க்கள் சிலர் பொலிஸ் தலை­மை­ய­கத்தில் முறைப்­பாடு செய்­துள்­ளமை ஒரு போலி நாடகம் எனக் குறிப்­பிட்­டுள்ள முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரவூப் ஹக்கீம், ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு கூஜா தூக்கிக் கொண்­டி­ருப்­ப­வர்கள் தேர­ருக்கு எதி­ராக முறைப்­பாடு செய்­வதில் எந்­தப்­ப­யனும் கிடை­யாது என்றும் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

தடுப்பூசி ஏற்றியோருக்கே உம்ராவுக்கு அனுமதி

கொரோனா வைர­ஸுக்கு எதி­ரான தடுப்­பூ­சி­களை ஏற்­றிக்­கொண்­டுள்ள யாத்­தி­ரி­கர்­க­ளுக்கு மாத்­தி­ரமே உம்­ராவை நிறை­வேற்ற முடியும் என்றும் மக்­காவின் பெரிய பள்­ளி­வா­சலில் தொழு­கையில் ஈடு­ப­ட­மு­டி­யும் என்றும் சவூதி அரே­பிய சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

இலங்கை – பலஸ்தீன் உறவில் மாற்றமில்லை

‘பலஸ்தீன் மக்­க­ளது போராட்டம் தொடர்­பிலும், இலங்­கைக்கும் பலஸ்­தீ­னுக்­கு­மி­டை­யி­லான நல்­லு­ற­விலும் எந்த மாற்­றங்­க­ளு­மில்லை. எமது கொள்­கையை மாற்­றிக்­கொள்­ள­வு­மில்லை, இதில் மாற்றுக் கருத்­துக்கு இட­மில்லை’ என வெளி­வி­வ­கார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரி­வித்தார்.

பள்ளிகளில் கூட்டு அமல்களுக்கு தடை

சுகா­தார அமைச்சு மற்றும் புத்­த­சா­சன, மத­வி­வ­கார அமைச்சு வெளி­யிட்­டுள்ள சுற்று நிரு­பங்கள், கொவிட் 19 வழி­காட்­டல்­க­ளுக்கு அமை­வா­கவே பள்­ளி­வா­சல்­களில் கூட்­டுத்­தொ­ழு­கைகள், கூட்­டாக குர்ஆன் ஓதுதல், நிக்காஹ் வைப­வங்கள் தடை­செய்­யப்­பட்­டுள்­ளன.