தேசிய ஷூரா சபையின் (NSC) உயர்மட்டக் குழுவொன்று கடந்த வெள்ளிக்கிழமை (06.12.2024) மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) யின் செயலாளர் டில்வின் சில்வாவை பத்தரமுல்லையில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் சந்தித்து தேசிய மற்றும் சமூக பிரச்சனைகள் குறித்து கலந்துரையாடியுள்ளது.
அக்குறணை பிரதேச வெள்ள அனர்த்தத்துக்கு தீர்வு காண கடந்த காலங்களில் முழுமையான எந்தவொரு செயற்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை.முதற்கட்டமாக சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். மாவட்ட செயலாளர் ஊடாக சம்பந்தப்பட்ட தரப்பினருடன் இணைந்து முறையான வேலைத்திட்டத்தை முன்வைக்க ஆலோசனை வழங்கியுள்ளோம் என விவசாயம், கால்நடை வளர்ப்பு, காணி மற்றும் விவசாயத்துறை அமைச்சர் லால் காந்த தெரிவித்தார்.
தப்லீக் ஜமாஅத் பணிகளுக்காக இலங்கைக்கு வருகை தந்த இந்தோனிஷிய பிரஜைகள் எண்மர் அண்மையில் நுவரெலியாவில் வைத்து கைது செய்யப்பட்ட விவகாரம் அனைவரதும் கவனத்தையும் ஈர்த்துள்ளது.