எதற்காக இந்த செயலணி?

'ஒரே நாடு ஒரே சட்டம்’ எனும் கொள்­கையை நாட்டில் அமுல்­ப­டுத்தும் நோக்கில் விசேட ஜனா­தி­பதி செய­லணி ஒன்று அமைக்­கப்­பட்­டுள்­ளது. இதன் தலை­வ­ராக பொது பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொ­ட­அத்தே ஞான­சார தேரர் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். மொத்தம் 13 பேரை உறுப்­பி­னர்­க­ளாகக் கொண்ட இக் குழுவில் நான்கு முஸ்­லிம்­களும் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளனர்.

ஜெய்லானியில் ஸியாரங்களை திறக்க தம்மரதன தேரர் மறுப்பு

தப்தர் ஜெய்­லா­னிக்கு உரித்­தான, ஏற்­க­னவே மண்­ணினால் மூடப்­பட்ட வர­லாற்றுப் புகழ்­மிக்க ஸியா­ரங்­களை மீண்டும் திறப்­ப­தற்கு நெல்­லி­ய­கல வத்­து­கும்­புரே தம்­ம­ர­தன தேரர் மறுப்புத் தெரி­வித்­துள்ளார். அத்­தோடு ஜெய்­லானி பள்­ளி­வா­சலின் தகர கூடா­ரத்தை அகற்றி விடு­வ­தற்கும் அவர் தீர்­மா­னித்­துள்ளார்.

ஹிஜாஸுக்கு பிணையளிப்பது குறித்து நவ. 19இல் தீர்மானம்

உயிர்த்­த­ஞா­யிறு தின தொடர்  தற்­கொலை தாக்­கு­தல்கள் குறித்த விசா­ர­ணை­க­ளுக்­காக கைது செய்­யப்­பட்டு சி.ஐ.டி.யில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்து பின்னர் தற்­போது விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லாஹ்­வுக்கு பிணை­ய­ளிப்­பதா இல்­லையா என்­பது தொடர்­பி­லான தீர்ப்பு எதிர்­வரும் நவம்பர் 19 ஆம் திகதி அறி­விக்­க­ப்படும் என புத்­தளம் மேல் நீதி­மன்றம் நேற்று அறி­வித்­தது.

சவூதிக்கான இலங்கை தூதுவராக அம்சா நாளை கடமையேற்பார்

சவூதி அரே­பி­யா­வுக்­கான இலங்கை தூது­வ­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ள பி.எம்.அம்சா நாளை வெள்­ளிக்­கி­ழமை தனது தூதுவர் கட­மை­களை பொறுப்­பேற்­ப­தற்­காக சவூதி அரே­பியா நோக்கி பய­ண­மா­க­வுள்ளார்.