இனத்துவ கட்சிகள் மீது நம்பிக்கையிழக்கும் சமூகம்
ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்கள் முடிவுக்கு வர இன்னும் ஒரு வார காலமே எஞ்சியிருக்கின்ற நிலையில் யார் வெல்வார் என்பதை உறுதியாகக் கூற முடியாதளவு பலத்த போட்டி நிலவுவதை அவதானிக்க முடிகிறது. வாக்குகள் பல வேட்பாளர்களிடையே சிதறுண்டு செல்வதற்கான வாய்ப்புகளே இன்று வரை தெரிகின்றன.