புத்தளத்தில் சோனகர்கள்
இலங்கை முஸ்லிம்களில் பெரும்பான்மையானோர் ‘சோனகர்’ ஆவர். சிங்கள மொழியில் "யொன்" அல்லது "யொன்னு" எனவும் பாளியில் "யொன்ன" என்றும் சமஸ்கிருத மொழியில் "யவன" எனவும் பிரயோகிக்கப்படும் வார்த்தைகளின் அர்த்தம் ‘அறபு நாட்டவர்’ என்பதாகும். தற்போது சிங்களத்தில் ‘யோனக’ என்ற பதம் பயன்படுத்தப்படுகின்றது.