மௌலவி அப்துர் ரஊபுக்கு எதிரான பத்வா ‘அடிப்படை உரிமை மீறல்’

காத்­தான்­கு­டியை தள­மாகக் கொண்­டி­யங்கும் சூபி முஸ்லிம் குழுவின் தலை­வ­ரான மௌலவி அப்துர் ரஊபின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­து­வ­துடன் அவ­ரது அடிப்­படை உரி­மையை பாது­காக்­கு­மாறு கோரி இரா­ஜாங்க அமைச்சர் பேரா­சி­ரியர் சன்ன ஜய­சு­மான்ன, ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செய­ல­ணியின் தலைவர் கல­கொட அத்தே ஞான­சார தேர­ரிடம் கோரிக்கை விடுத்­துள்ளார். ஒரே நாடு ஒரே சட்டம் செய­ல­ணியை நேற்­றைய தினம் சந்­தித்து தனது கருத்­துக்­களை முன்­வைத்­த­போது அவர் இவ்­வாறு குறிப்­பிட்­டுள்ளார்.

தலைவலிக்கு தலையணை மாற்றும் தீர்மானங்கள்

நாட்டின் பொரு­ளா­தார நெருக்­கடி நிலை கைமீறிச் சென்று கொண்­டி­ருக்­கின்ற நிலையில் அதி­லி­ருந்து மீள்­வ­தற்­கான வழி­களைத் தோடாது மேலும் மேலும் நாட்டை சிக்­க­லுக்குள் தள்­ளு­கின்ற செயற்­பா­டு­க­ளையே அர­சாங்கம் முன்­னெ­டுத்து வரு­கின்­றமை கவ­லைக்­கு­ரி­ய­தாகும்.

கொரோனா பிணவறைகளின் துயரக் கதைகள்

கொரோனா எமது வாழ்க்­கைக்குக் கற்றுத் தந்­துள்ள பாடங்கள் அநேகம். மருத்­து­வ­மனைக் கட்­டில்­களில் ஒக்­ஸிஜன் குழாய்கள் மூலம் உயிரைப் பற்றிப் பிடித்துக் கொண்­டி­ருக்கும் மனி­தர்­களைப் போலவே நாளுக்கு நாள் மூச்சு நின்று போன மனி­தர்­களால் பிண­வ­றை­களும் நிரம்பி வழிந்த காட்சிகளை நாம் கண்டோம்.

மஜ்மா நகரின் இரட்டை நெருக்கடி!

பெப்­ர­வரி 25 அன்று வெளி­யி­டப்­பட்ட 2216/38 ஆம் இலக்க வர்த்­த­மானி கொவிட் 19 தொற்­றினால் இறந்­த­வர்­களின் உடல்­களை கட்­டா­ய­மாக தகனம் செய்யும் கொள்­கையை இரத்துச் செய்­த­துடன் அடக்கம் செய்­யவும் அனு­ம­தித்­தது. மார்ச் 2021 இன் தொடக்­கத்தில், கொவிட்-19 தொற்­றினால் இறந்­த­வர்கள் ஓட்­ட­மா­வடி மஜ்மா நகரில் அடக்கம் செய்­யப்­பட்­டனர்.