உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புட்டதாகக் கூறி கைது செய்யப்பட்ட இலங்கை ஜமாஅத்தே இஸ்லாம் அமைப்பின் முன்னாள் தலைவரான உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். சட்ட மா அதிபரின் இணக்கப்பாட்டுடன், அவருக்கு நேற்று முன்தினம் (11) கொழும்பு மேலதிக நீதிவான் சந்திம லியனகே பிணையளித்து உத்தரவிட்டார்.
நாட்டில் நிலவும் நிதி நெருக்கடி மற்றும் அமெரிக்க டொலர் பற்றாக்குறை காரணமாக அரசாங்கம் ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்துக்கு நிதியுதவியினையும் மற்றும் விமானங்களுக்குத் தேவையான எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்கு அமெரிக்க டொலர்களையும் கடனுதவியாக சவூதி அரேபியாவின் அபிவிருத்திக்கான நிதியத்திடமிருந்து (SFD) பெற்றுக் கொள்ளத் தீர்மானித்துள்ளது.
இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமானவுக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபைக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தெரியவருகின்றது.