பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முர்ரியில் கடும் பனிப்பொழிவு காரணமாக 22 பேர் உயிரிழந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியிலும் கவலையிலும் ஆழ்த்தியுள்ளது.
‘இலங்கைக்கு காதி நீதிமன்றங்கள் தேவையில்லை என்றே நான் கூறுகிறேன். காதி நீதிமன்றங்கள் மூலம் பெண்களுக்கும், பிள்ளைகளுக்கும் நியாயம் கிடைப்பதில்லை. எனக்கு தெரியாமலே எனது கணவருக்கு விவாகரத்து வழங்கப்பட்டுள்ளது. எமது நாட்டுக்கு ஒரே சட்டமே தேவை’ என கடந்த வாரம் பதுளையில் இடம்பெற்ற ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியின் அமர்வில் சாட்சியமளித்த பதுளையைச் சேர்ந்த பெண்மணி பஸீனா தெரிவித்தார்.
தமிழ் மொழிக்கு இருக்கிற உன்னதமான பண்புகளில் ஒன்று அது பல்வேறு சமயங்களின் இலக்கியங்களையும் தன்னகத்தே கொண்டதாகும். பௌத்த, கிறிஸ்தவ, சைவ, இஸ்லாமிய இலக்கியங்கள் இம்மொழியிலே வந்திருக்கின்றன. இவ்வகையில் இஸ்லாமிய சமயம் சார்ந்த தமிழில் வந்த இலக்கியங்களை மீள் கண்டுபிடிப்புச் செய்து அதற்கென்ற தனிப்பாரம்பரியத்தை உருவாக்கிய பெருமை பேராசிரியர் அல்லாமா ம.மு.உவைஸ் அவர்களைச் சாரும்.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளரும் தலைமைத்துவ மேம்பாட்டுக்கான தேசிய நிலையத்தின் பணிப்பாளருமாகிய ஏ.பீ.எம். அஷ்ரப், இலங்கை நிருவாக சேவையின் விஷேட தரத்திற்கு 01.07.2021 திகதி முதல் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.