கூரகல தொல்பொருள் பிரதேசத்தை அழித்ததாக கூறும் குற்றச்சாட்டுகளை மறுக்கிறது தரீக்கா கவுன்சில்

பல நூற்­றாண்டு கால­மாக அடிப்­படை­வா­த­ கு­ழுக்கள் கூர­கல தொல்­பொருள் பிர­தே­சத்தைப் பல­வந்­த­மாக கைப்­பற்றி புரா­த­ன­தொல்­பொ­ருளை அழித்­துள்­ளன என்று சிங்­கள தொலைக்­காட்சி சேவை­யொன்றில் முன் வைக்­கப்­பட்ட குற்­றச்­சாட்­டினை தரீக்கா கவுன்ஸில் மற்றும் கொழும்பு தெவட்­ட­கஹ பள்­ளி­வாசல் நிர்­வாக சபை என்­பன முழு­மை­யாக மறுத்­துள்­ள­துடன், வன்­மை­யாகக் கண்­டித்­துள்­ளன.

உயிர்த்த ஞாயிறு ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை அறிக்கையை முழுமையாக வெளியிட்டால் சூத்திரதாரி யார் என தெரிந்துகொள்ளலாம்

உயிர்த்த ஞாயிறு தின தாக்­குதல் தொடர்­பான ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­கு­ழுவின் அறிக்கை முழு­மை­யாக வெளி­யி­டப்­பட்டால் அதன் சூத்­தி­ர­தாரி யார் என்­பது அம்­ப­ல­மாகும் என கண்டி மாவட்ட ஐக்­கிய மக்கள் சக்­தியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.எச்.அப்துல் ஹலீம் தெரி­வித்தார்.

மு.கா., அ.இ.ம.கா. அரச ஆதரவு அணி அமைச்சர் பசிலை சந்திக்க திட்டம்

அரசின் திட்­டங்­க­ளுக்கும், கொள்­கை­க­ளுக்கும், ஆத­ரவு வழங்­கி­வரும் முஸ்லிம் காங்­கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் நிதி­ய­மைச்சர் பஷில் ராஜ­ப­க்ஷவை சந்­தித்து நாட்டின் நிகழ்­கால சமூக, பொரு­ளா­தார மற்றும் முஸ்லிம் சமூ­கத்தின் காணிப்­பி­ரச்­சி­னை­களை கலந்­து­ரை­யாடி தீர்­வு­களைப் பெற்றுக் கொள்­வ­தற்கு திட்­ட­மிட்­டுள்­ளனர்.

பொரளை தேவாலய குண்டு விவகாரம்: மாறுபட்ட வாக்குமூலங்கள் அளிக்கும் பிரதான சந்தேக நபர்

வெலிக்­கடை சிறைச்­சா­லைக்கு அருகே, பொரளை -ஆனந்த ராஜ­க­ருணா மாவத்­தையில் அமைந்­துள்ள சகல பரி­சுத்­த­வான்கள் தேவா­லய வளா­கத்தில் கைக்­குண்டு வைக்­கப்­பட்ட விவ­கா­ரத்தில், அக்­குண்டை அங்கு கொண்டு சென்று வைத்­தவர் என நம்­பப்­படும்  நபர் கைது செய்­யப்­பட்­டுள்ள நிலையில், அவ­ரது வாக்கு மூலத்­துக்கு அமைய ஓய்­வு­பெற்ற வைத்­தியர் ஒருவர் கைது செய்­யப்பட்­டுள்ளார்.