கட்டாய ஜனாஸா எரிப்பு: விசாரணைகளை ஆரம்பித்த சி.சி.டி.
கட்டாய ஜனாஸா எரிப்பு குறித்து குற்றவியல் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்றால் உயிரிரிழந்தவர்களின் ஜனாஸாக்களை கட்டாய தகனம் செய்த நடவடிக்கையின் பின்னால் உள்ள சதியை வெளிப்படுத்தவும், இனவாத நோக்கங்களை கண்டறிந்து நீதியை நிலைநாட்டுமாறும் கோரி பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டது.