இஸ்லாமிய விழுமியங்களையும் போதனைகளையும் பாதுகாப்பதற்கும் பரப்புவதற்கும் அல்–குர்ஆன் பெரும் பங்களிப்புச் செய்துள்ளது: அமைச்சர் சுனில் செனவி
தூய அரபு மொழியில் எழுதப்பட்ட புனித அல்-குர்ஆன், இஸ்லாமிய மத விழுமியங்கள் மற்றும் போதனைகள் ஆகியவற்றை பாதுகாப்பதற்கும் பரப்புவதற்கும் பெரும் பங்களிப்புச் செய்துள்ளது என புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்தார். மகத்தான கலாசார அடையாளங்களைக் கொண்ட உலகளாவிய மொழியாகவுள்ள அரபு மொழியினை 450 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் பேசுகின்றனர். அத்துடன் சுமார் 25 நாடுகளின் உத்தியோகபூர்வ மொழியாகவும் அரபு மொழி காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டார்.