தனியார் சட்ட விவகாரத்தில் பீரிஸ் இரட்டை வேடம்

(ஏ.ஆர்.ஏ.பரீல்) அர­சாங்கம் முஸ்லிம் தனியார் சட்­டத்தில் உரிய திருத்­தங்­களை முஸ்லிம் சமூ­கத்தின் அனு­ம­தி­யுடன் மேற்­கொள்­ளலாம். ஆனால் முஸ்லிம் தனியார் சட்­டத்தை இல்­லா­தொ­ழிக்க முடி­யாது. இதற்­காக நாம் தொடர்ந்தும் போரா­டுவோம். முஸ்லிம் தனியார் சட்ட விவ­கா­ரத்தில் வெளி­வி­வ­கார அமைச்சர் சர்­வ­தே­சத்­துக்கு ஒன்றும் இலங்­கைக்குள் மற்­றொன்­று­மாக ஒன்­றுக்­கொன்று முர­ணான கருத்­துக்கள் கூறி­வ­ரு­வதை நிறுத்த வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பைசர் முஸ்­தபா தெரி­வித்தார். கொழும்பில், சுதந்­திர சதுக்­கத்தில்…

இளம் கவிஞர் அஹ்னாப் ஜஸீம் விவகாரம் : அடிப்படை உரிமை மனுவை வாபஸ் பெறப் போவதில்லை

'நவ­ரசம்" என்ற கவிதைத் தொகுப்பு புத்­த­கத்தை எழு­தி­ய­மைக்­காக கைது செய்­யப்­பட்டு, பின்னர் அடிப்­ப­டை­வா­தத்தை போதனை செய்­த­தாக குற்றம் சுமத்­தப்­பட்­டுள்ள அஹ்னாப் ஜஸீம் எனும் இளம் கவி­ஞரின் கைதி­னையும் தடுப்புக் காவ­லி­னையும் சட்ட விரோ­த­மா­னது எனக் கூறி உயர் நீதி­மன்றில் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள எஸ்.சி.எப்.ஆர். ஏ 114/21 எனும் அடிப்­படை உரிமை மீறல் மனுவை மீளப்பெறும் நோக்கம் இல்லை என உயர் நீதி­மன்­றுக்கு நேற்­று­முன்­தினம் அறி­விக்­கப்­பட்­டது.

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கடுமையான முறையில் துன்புறுத்தப்பட்டேன்

பயங்­க­ர­வாத தடுப்புச் சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைத்­தி­ருந்­த­போது உள ரீதி­யா­கவும் உடல் ரீதி­யா­கவும் கடு­மை­யான முறையில் துன்­பு­றுத்­தப்­பட்டேன் என கவிஞர் அஹ்னாப் ஜெஸீம் ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் கூட்­டத்­தொ­ட­ரின்­போது சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

டாக்டர் ஷாபியை வழக்கிலிருந்து முழுமையாக விடுவிக்க மறுப்பு

குரு­ணாகல் போதனா வைத்­தி­ய­சா­லையில் தாய்­மா­ருக்கு சட்ட விரோ­த­மாக கருத்­தடை செய்­த­தாக குற்றம் சுமத்­தப்­பட்டு கைது செய்­யப்­பட்டு பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்ள குரு­ணாகல் போதனா வைத்­தி­ய­சா­லையின் முன்னாள் பிர­சவ மற்றும் மகப்­பேற்று வைத்­தியர் ஷாபி சிஹாப்­தீனை, அவ்­வ­ழக்­கி­லி­ருந்து முற்­றாக விடு­விக்க குரு­ணாகல் நீதிவான் நீதி­மன்றம் நேற்று (9) மறுத்­தது.