“முஸ்லிம் நிகழ்ச்சி” மூலம் அறிமுகமான பிரபல பாடகி சுஜாதா அத்தநாயக்க

இலங்கை ஒலிபரப்புக் கூட்­டுத்­தா­பன முஸ்லிம் சேவைக்கு வளம் சேர்த்து, தாமும் நேயர்கள் மத்­தியில் அடை­யாளம் தேடி புக­ழைத்­தே­டிக்­கொண்ட, சன்­மார்க்க போத­கர்கள், எழுத்­தா­ளர்கள், கவி­ஞர்கள், கலை­ஞர்கள், பாட­கர்­களை இன்­றைய, அடுத்த தலை­மு­றைக்கும் இனங்­காட்டி, ஆவ­ணப்­ப­டுத்தும் நோக்கில் முஸ்லிம் சேவையில் மாதம் இரு நிகழ்ச்­சி­யாக ஒலி­ப­ரப்­பாகி வரும் நிகழ்ச்­சியே "பாரம்­ப­ரியம்" நிகழ்ச்சி.

வரலாற்றில் பதிவாகிவிட்ட மஜ்மா நகர் மையவாடி

“கொவிட் தொற்­றினால் உயி­ரி­ழப்­ப­வர்­களை அடக்கம் செய்யும் ஓட்­ட­மா­வடி மஜ்மா நகர் மைய­வா­டியில் இடப்­பற்­றாக்­குறை ஏற்­பட்­டுள்­ளது. அங்கு தொடர்ந்தும் அடக்கம் செய்­வதை இடை­நி­றுத்தி, அந்­தந்த மாவட்­டங்­களில் அடக்கம் செய்ய அனு­ம­திக்க வேண்டும் என்­பதே எமது கோரிக்­கை­யாகும்”

மஜ்மா நகர் மையவாடி முழு உலகுக்கும் முன்னுதாரணமாக விளங்குகிறது

கொவிட் தொற்­றினால் மர­ணித்­த­வர்­களை நாட்டின் எப்­ப­கு­தி­யிலும் உள்ள மைய­வா­டி­களில் அடக்கம் செய்ய முடியும் என சுகா­தார அமைச்சு அனு­மதி வழங்­கி­யுள்­ளது. இந் நிலையில் சுகா­தார அமைச்சின் கொவிட் 19 விவ­கா­ரங்­க­ளுக்­கான இணைப்­பா­ள­ரா­கவும் ஓட்­ட­மா­வ­டியில் சட­லங்­களை அடக்கம் செய்யும் பணி­களின் ஒருங்­கி­ணைப்­பா­ள­ரா­கவும் செயற்­பட்ட டாக்டர் அன்வர் ஹம்­தா­னியைச் சந்­தித்து இத் தீர்­மானம் மற்றும் அதன் பின்­னணி தொடர்பில் உரை­யா­டினோம். அவர் விடிவெள்ளிக்கு வழங்­கிய செவ்வி வரு­மாறு :

கொவிட் சடலங்களை அருகிலுள்ள மையவாடிகளில் அடக்கம் செய்ய அனுமதி

கொரோனா தொற்­றினால் உயி­ரி­ழக்கும் நபர்­களை மார்ச் 5 ஆம் திகதி முதல் அரு­கி­லுள்ள மைய­வா­டி­க­ளி­லேயே நல்­ல­டக்கம் செய்ய அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ள­தாக சுகா­தார சேவைகள் பணிப்­பாளர் நாயகம் அசேல  குண­வர்­த­னவின் கையெ­ழுத்­துடன் வெளி­யி­டப்­பட்­டுள்ள EPID/400/2019/ n- Cov  எனும் சுற்று நிருபம் ஊடாக அறி­வித்­துள்ளார்.