கூரகல தப்தர் ஜெய்லானி: பெளத்தமயமாக்கும் திட்டத்தின் தொடர்ச்சி- 3
பொது பல சேனாவின் ஆதிக்கம் தான் அந்தக் கூட்டத்தில் காணப்பட்டது. சட்டப்படி தான் இந்த அச்சுறுத்தல் நிலைமைகள் கையாளப்பட வேண்டும் என தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் விளக்கமளித்தார். சட்டமோ வரலாறோ ஏனைய எதுவுமே நமக்கு ஒரு பொருட்டல்ல, குறிப்பிட்ட தினத்துக்குள் கூரகல பிரதேசம் சுத்தம் செய்யப்படாவிட்டால் (குறிப்பிட்ட ஆண்டின் பெப்ரவரி 14ஆம் திகதி) நாங்கள் 25000 பேர் பலவந்தமாக அங்கு புகுந்து அந்த இடத்தைக் கைப்பற்றுவோம் என அவர்கள் அங்கு கூச்சலிட்டனர்.