மக்களின் அரசியல் புரிந்துணர்வும் மாற்றமுறும் அரசியலும்

எமது நாட்டு மக்­களின் குறிப்­பாக வாக்­கா­ளர்­களில் பெரும்­பான்­மை­யி­னர்­க­ளா­கிய கிரா­மிய மக்­களின் அர­சியல் புரி­தலை விருத்தி செய்­வ­தற்­கான வழி வகைகள் இல்­லையா? கிரா­மிய சமூ­கத்தில் அர­சியல் செய்யும் ஓர் அர­சியல் செயற்­பாட்­டாளர் அண்­மையில் என்­னிடம் கேட்ட மேற்­படி வினாவை கலந்­து­ரை­யா­டு­வ­தற்­காக இந்தக் கட்­டு­ரையைப் பயன்­ப­டுத்திக் கொள்­கிறேன்.

முஸ்லிம்களின் பேரீத்தம்பழ அரசியல்

இலங்­கையில் இஸ்லாம் காலூன்­றிய காலம்­தொட்டு முஸ்­லிம்­க­ளுக்கும் பேரீத்தம் பழங்­க­ளுக்கும் நோன்பு மாதத்­துக்­கு­மி­டையே நெருங்­கிய தொடர்பு உண்டு. அந்தத் தொடர்பு சுதந்­திரம் கிடைத்­ததன் பின்னர் ஆட்­சி­யி­லி­ருக்கும் அர­சாங்­கங்­க­ளுக்கு முஸ்­லிம்­களின் ஆத­ரவைப் பெறு­வ­தற்கும், தேர்தல் காலங்­களில் அவர்களின் வாக்­கு­களைத் திரட்­டு­வ­தற்கும், பயன்­ப­டுத்­தப்­பட்டு வந்­துள்­ளது.

தாக்­குதல் நடாத்­திய குழு முஸ்­லி­மாக இருந்­தாலும் பின்­ன­ணியில் இருந்­த­வர்கள் யார் என்­பதே இப்­போ­துள்ள பிரச்­சினை

உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் நடாத்­திய குழு முஸ்­லி­மாக இருந்­தாலும் இதன் பின்­ன­ணியில் இருந்­த­வர்கள் யார்? என்­பதே இப்­போ­துள்ள பிரச்­சினை. தாக்­கு­த­லுக்கு முன்பு கத்­தோ­லிக்க மற்றும் முஸ்லிம் மக்கள் மத்­தியில் கொலை செய்யும் அள­வுக்கு பிரச்­சி­னைகள் எதுவும் இருக்­க­வில்லை. இது அர­சியல் சூழ்ச்சி எனும் சந்­தேகம் நில­வு­கி­றது’ என்­கிறார் ‘ஞானாந்த பிர­தீப’ எனும் சஞ்­சி­கையின் பிர­தம ஆசி­ரியர் சிறில் காமினி ஆண்­டகை.

அம்பாறை மாவட்ட கிராமங்களை அச்சுறுத்தும் காட்டு யானைகள்!

“எனது வீட்டின் இரண்டு சுவர்த் துண்­டு­களை யானை­யொன்று கடந்த சனிக்­கி­ழமை (12) நள்­ளி­ரவு 2.00 மணி­ய­ளவில் உடைத்­து­விட்டுச் சென்­றுள்­ளது. இதனால், நாங்கள் மிகவும் அச்­சத்­து­ட­னேயே இரவில் நித்­திரை செய்­கின்றோம்” என சம்­மாந்­துறை, மலை­யடி கிரா­மத்­தினைச் சேர்ந்த எம்.ஏ. உம்மு சல்மா கூறினார்.