வாழைச்சேனை பள்ளிவாசலில் வழங்கப்பட்ட தண்டனை: அறுவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிப்பு; விசாரணைகள் தொடர்கின்றன‌

வாழைச்­சேனை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பள்­ளி­வாசல் ஒன்றில், சட்­டத்­துக்கு முர­ணாக பெண் ஒரு­வ­ருக்கும், ஆண் ஒரு­வ­ருக்கும் தண்­டனை வழங்­கப்­பட்­ட­தாக கூறப்­படும் சம்­பவம் தொடர்பில் 6 பேரை கைது செய்­த­தாக வாழைச்­சேனை பொலிஸார் தெரி­வித்­தனர். திரு­ம­ணத்­துக்கு புறம்­பான உறவில் இருந்­த­தாக கூறி பெண் ஒரு­வ­ரையும் ஆண் ஒரு­வ­ரையும், வாழைச்சேனை பிர­தே­சத்தில் உள்ள பள்­ளி­வாசல் ஒன்­றுக்கு அழைத்து அங்கு தண்­டனை அளிக்­கப்­பட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கின்­றது.

சுனாமி வீட்டுத் திட்டத்தை கூடிய விரைவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிர்ந்தளிக்கவும்

சவூதி அரே­பி­யாவின் நிதி­யு­த­வியில் அக்­க­ரைப்­பற்று, நுரைச்­சோலை பிர­தே­சத்தில் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள சுனாமி வீட்டுத் திட்­டத்தை கூடிய விரைவில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு பகிர்ந்­த­ளிக்­கு­மாறு இலங்­கைக்­கான சவூதி அரே­பிய தூதுவர் காலித் ஹமூத் அல்­கஹ்­தானி அர­சாங்­கத்­திடம் கோரிக்கை விடுத்­துள்ளார்.

தவுலகலவில் மாணவி கடத்தல் விவகாரம் : பிரதான சந்தேக நபர், சாரதி, நண்பருக்கு 27 ஆம் திகதி வரை விளக்கமறியல்

கண்டி, தவு­ல­கல பொலிஸ் பிரிவில், மேல­திக வகுப்­புக்­காக சென்­று­கொண்­டி­ருந்த போது கடத்­தப்­பட்ட பாட­சாலை மாணவி ஆபத்­தின்றி பொலி­ஸாரால் மீட்­கப்­பட்ட நிலையில், கடத்­தலின் பிர­தான சந்­தேக நப­ரையும் அவ­ரது நண்பர் மற்றும் வேன் சார­தியையும் எதிர்­வரும் 27 ஆம் திக­தி­ வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க கம்­பளை நீதிவான் நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

புத்தளம் அப்துல்லாஹ் ஹஸரத் அனைவருக்கும் முன்மாதிரிமிக்கவர்

புத்தளம் காஸிமிய்யா அரபுக் கல்லூரியின் முன்னாள் அதிபரும், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் புத்தளம் மாவட்ட செயற்குழு உறுப்பினரும், முன்னாள் தலைவருமான அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் (அப்துல்லாஹ் ஹஸரத்) அவர்களின் மறைவு இலங்கை முஸ்லிம் சமூகத்திலும் குறிப்பாக புத்தளம் மாவட்ட முஸ்லிம் தலைமைத்துவத்திலும் நிரப்ப முடியாத இடைவெளியைத் தோற்றுவித்துள்ளது. அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்கள், புத்தளம் நகரில் கல்விக்கு ஒளி கொடுத்த நாடறிந்த மூத்த உலமா மஹ்மூத் ஹஸரத் அவர்களின் புதல்வராவார்.