அரசில் இருந்து ஏன் மதம் பிரிக்கப்பட வேண்டும்?
அரசின் பணியானது அடிப்படையில் உலகாயத நோக்கு கொண்டதாகும். நாட்டிற்குத் தேவையான கொள்கைகளை வகுத்தலும் நடைமுறைப்படுத்தலும், மக்களின் உலகாயத தேவைகளான நல்ல கல்வி, சுகாதாரம், பொருளாதாரப் பாதுகாப்பு, சட்டத்தின் முன் அனைவரும் சமமாக மதிக்கப்படுவதை உறுதி செய்தல் என்பன ஓர் அரசின் கடமையாகும். நிகழ்கால சூழ்நிலைகளை கருத்திலெடுத்து இவை தொடர்பாக தர்க்கரீதியான தீர்மானங்களை அரசு மேற்கொள்ளும்.