பைஸல், தெளபீக், இஷாக் அரசுக்கான ஆதரவை விலக்கிக்கொண்டனர்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான பைசல் காசிம், எம்.எஸ்.தௌபீக் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஏ.ஆர்.இஷாக் ஆகியோர் அர­சாங்­கத்­திற்கு ஆத­ர­வ­ளிப்­ப­தி­லி­ருந்தும் வில­கிக்­கொள்­வ­தாக அறி­வித்­துள்­ளனர்.

‘ஹக்கீமின் உத்தரவுக்கமையவே கோத்தா அரசை ஆதரித்தோம்’

தமது கட்­சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் வேண்டிக் கொண்­ட­தற்­க­மை­யவே, 20 ஆம் திருத்­தத்­திற்கு ஆத­ரவு வழங்­கி­ய­தா­கவும் அத­ன­டிப்­ப­டை­யி­லேயே தற்­போதும் அர­சாங்­கத்­துக்கு ஆத­ரவு வழங்கி வரு­வ­தா­க சுற்றுச்சூழல் அமைச்சர் நசீர் அஹமட் தெரி­வித்­துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் : வருடங்கள் மூன்று நியாயம் எப்போது?

கொழும்பு மற்றும் நீர் கொழும்பு, மட்­டக்­க­ளப்பு ஆகிய இடங்-­களில் கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி தம்மைத் தாமே இலங்­கையின் ஐ.எஸ்.ஐ.எஸ். இனர் என அழைத்­துக்­கொண்ட தேசிய தெளஹீத் ஜமா அத் தலை­வ­னாக செயற்­பட்ட சஹ்ரான் ஹஷீம் தலை­மை­யி­லான கும்­ப­லினால் 8 தொடர் குண்டுத் தாக்­கு­தல்கள் நடாத்­தப்­பட்­டன.

நாடு முழுவதிலும் கொந்தளிப்பு நிலை

ஜனா­தி­பதி கோத்தாபய ராஜ­ப­க்ஷவும் அவரது அர­சாங்­கமும் பதவி வில­க­வேண்டும் என வலி­யு­றுத்தும் ஆர்ப்­பாட்­டங்கள் உக்­கி­ர­ம­டைந்­துள்­ள­மையால் நாட்டில் கொந்­த­ளிப்­பான நிலை­மை­யொன்று உரு­வா­கி­யுள்­ளது. இந்­நி­லையில், இதனை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு அர­சாங்கம் இரா­ணுவம் மற்றும் பொலிஸ் பலத்தை பயன்­ப­டுத்த முயற்சிப்பது நிலைமையை மேலும் மோச­ம­டையச் செய்துள்ளது.