உடுநுவரவில் பட்டப்பகலில் மாணவி கடத்தல்: நடந்தது என்ன?
முஸ்லிம் மாணவியொருவர் வேனில் வந்தவர்களால் கடத்திச் செல்லப்படும் சீ.சீ.டி.வி காட்சி கடந்த சனிக்கிழமை காலை சமூக ஊடகங்களில் வைரலாகத் தொடங்கியது. அத்துடன், இக்கடத்தல் பற்றி தொலைக்காட்சி சேவைகளிலும் பிரேக்கிங் நியுஸ் வர ஆரம்பித்தது. இது நாட்டு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் தோற்றுவித்தது. இக்கடத்தல் சம்பவம் காலை வேளையில் பலருக்கு முன் நடைபெற்றமையானது பெரும் அதிர்ச்சியைத் தோற்றுவித்ததில் வியப்பில்லை. சீருடை அணிந்திருந்த மாணவி கடத்தப்படுவது கண்டு பலரும்…