நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலை தொடர்பில் நிதியமைச்சர் அலி சப்ரி நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் வெளியிட்ட கருத்துக்கள், எதிர்காலம் குறித்த அச்சத்தை மேலும் தீவிரமடையச் செய்கின்றன.
அருந்திக பெர்ணான்டோ எம்.பி. இங்கு உரையாற்றுகையில், மதம் தொடர்பான வசனம் ஒன்றினைக் கூறி காலி முகத்திடல் போராட்டத்தில் அடிப்படைவாதம் இருப்பதாகக் கூறினார். கோல்பேஸ் போராட்டக்கள பூமியில் அடிப்படைவாதம் இல்லை. இந்நாட்டில் விதைக்கப்பட்ட இனவாதம் மற்றும் அடிப்படைவாதத்தை துடைத்தெறிவதற்காகவே இளைஞர்கள் அங்கு ஒன்று கூடியிருக்கிறார்கள் என்பதை அருந்திக பர்ணாந்து புரிந்து கொள்ள வேண்டும்