வன்செயல்களில் ஈடுபடாதீர்

நாட்டின் இன்­றைய அசா­தா­ரண நிலையில் நாட்டு மக்கள் அனை­வரும் அமைதி காக்கும் படியும் எவ்­வித வன்­செ­யல்­களில் ஈடு­பட வேண்­டா­மெ­னவும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் கோரிக்கை விடுத்­துள்­ளது.

ஜும்ஆத் தொழுகை குறித்து உலமா சபையின் அறிவிப்பு

கொவிட் 19 பர­வ­லுக்கு முன் ஜும்ஆத் தொழுகை நடை­பெற்ற மஸ்­ஜி­து­களில் மாத்­திரம் இனி வெள்­ளிக்­கி­ழமை ஜும்ஆத் தொழு­கையை நடத்­து­மாறு அகில இலங்கை ஜம்­இய்துல் உலமா அறி­வித்­துள்­ளது.

வீரகெட்டிய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவரின் ஜனாஸா அடக்கம்

வீர­கெட்­டிவில் இடம்­பெற்ற துப்­பாக்கிச் சூட்டுச் சம்­ப­வத்தில் உயி­ரி­ழந்த எம்.எப்.எம். நபாயிஸ் (வயது 34) எனும் இளை­ஞரின் ஜனாஸா நேற்று முன்­தினம் இரவு யக்­கஸ்­முல்ல ஜும்ஆ பள்­ளி­வாசல் மைய­வா­டியில் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டது.

இராணுவத்தினரின் பிரசன்னம் அதிகரிப்பு

தலை­நகர் கொழும்பு உட்­பட நாட்டின் பல பகு­தி­க­ளிலும் பாது­காப்புக் கட­மை­களில் இரா­ணுவ பிர­சன்னம் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. குறிப்­பாக கொழும்பின் பிர­தான வீதி­களில் கவச வாக­னங்­களில் நேற்றுக் காலை முதல் இரா­ணு­வத்­தினர் ரோந்து நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டுள்­ளனர்.