போராடும் மக்கள் மீதான தாக்குதலை கண்டிக்கிறோம்

காலி­மு­கத்­தி­டலில் ஒரு மாத கால­மாக, மிகவும் அமை­தி­யான முறையில் சாத்­வீக ரீதி­யாக போராடி வந்­த­வர்கள் மீது மேற்­கொள்­ளப்­பட்ட திட்­ட­மி­டப்­பட்ட தாக்­கு­தலை வன்­மை­யான கண்­டிப்­ப­தாக தேசிய ஷூரா சபை தெரி­வித்­துள்­ளது.

ஏறாவூரில் நஸீர் அஹமடின் அலுவலகம் ஆடைத் தொழிற்சாலைகள் மீது தாக்குதல்

மட்­டக்­க­ளப்பு ஏறாவூர் நகரில் செவ்­வாய்க்­கி­ழமை இரவு இடம்­பெற்ற வன்­மு­றை­களில் மட்­டக்­க­ளப்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் முன்னாள் சுற்­றாடல் அமைச்­சரும் முன்னாள் கிழக்கு மாகாண முத­ல­மைச்­ச­ரு­மான நஸீர் அக­மட்டின் அலு­வ­லகம், அவ­ருக்குச் சொந்­த­மான ஆடைத் தொழிற்­சா­லைகள் என்­பன தாக்­கு­த­லுக்கு இலக்­கா­கி­யுள்­ளன. அத்­துடன் அவ­ரது உற­வி­னர்­க­ளுக்குச் சொந்­த­மான வீடு மற்றும் உண­வகம் என்­ப­னவும் தாக்கி சேத­மாக்­கப்­பட்­டுள்­ளன.

ஆர்ப்பாட்டங்கள் மீது தாக்குதல் நடத்திய குண்டர்களை சட்டத்தின் முன் நிறுத்துக

ஜன­நா­யக ரீதி­யாக ஆர்ப்­பாட்­டங்­களை மேற்­கொண்டு வருவோர் மீது மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தலை அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா வன்­மை­யாகக் கண்­டிப்­ப­தாக அதன் பதில் பொதுச் செய­லாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.தாஸீம் விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

நீர்கொழும்பு பெரியமுல்லை பிரதேசத்தில்தோற்கடிக்கப்பட்ட இன வன்முறையை ஏற்படுத்தும் முயற்சி

அர­சியல் பொரு­ளா­தர நெருக்­க­டியால் நாட்டில் ஏற்­பட்­டி­ருக்கும் அமை­தி­யற்ற சூழ்­நி­லையை இன வன்­மு­றை­யாக மாற்­றி­ய­மைக்கும் முயற்­சிகள் ஆங்­காங்கே இடம்­பெ­று­வதை அவ­தா­னிக்க முடி­கி­றது. இதன் ஓர் அங்­க­மாக நேற்று முன்­தினம் மாலை நீர்­கொ­ழும்பு பகு­தியில் பதற்­ற­மா­ன­தொரு சூழ்­நிலை திட்­ட­மிட்டு ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.