ஜனாதிபதி முறைமையை நீக்கி 19 ஐ அமுல்படுத்த நடவடிக்கை
பாராளுமன்றில் பெரும்பாலான தரப்பினரது நம்பிக்கையை பெற்றுக்கொள்ளும் அதேபோல் நாட்டு மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் பிரதமரையும், அமைச்சரவையினையும் இவ்வாரத்திற்குள் நியமிப்பேன். அதேபோல் அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை மீண்டும் செயற்படுத்தும் வகையிலான அரசியலமைப்பினை திருத்தவும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்து செய்வதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு உறுதியளித்தார்.