பாராளுமன்றத் தேர்தல் 2024: தகுதியான வேட்பாளர்களை உடன் இனங்காண வேண்டும்
பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்து வரும் இரு வாரங்களுக்குள் வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் காணப்படும் நிலையில், அது தொடர்பில் முஸ்லிம் சமூகம் சிந்தித்து செயற்பட வேண்டும்.
இது தொடர்பில் சமூகத்தின் சிவில் சமூக பிரதிநிதிகள், அரசியல் தலைமைகள் அனைவரும் ஒன்றிணைந்து, பொருத்தமான புதிய இளம் துடிப்புள்ள வேட்பாளர்களை அடையாளம் கண்டு தேர்தலில் களம் இறக்க பொறிமுறை ஒன்றினை முன்னெடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.