நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள் மிகப் பாரதூரமான பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில், புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச நியமித்துள்ளார். ராஜபக்சாக்களுக்கு எதிரான மக்களின் கோபம் வன்முறையாக வெடித்ததைத் தொடர்ந்து, அவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்தனர்.
மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையின் பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜுதீனின் 10 ஆவது நினைவு தினம் நேற்று முன்தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
கடந்த பல வாரங்களாகக் காலிமுகத் திடல் ஒரு நிறைமாதக் கர்ப்பிணியாக மாறி பிரசவ வேதனையால் துடித்துக் கொண்டிருக்கிறாள். “கோத்தாவே போ”, “225 தேவையில்லை”, “கோத்தா-போ-கிராமம்” என்ற கோஷங்கள் எல்லாமே அந்தக் கர்ப்பிணியின் பிரசவ வேதனையின் அழுகுரல்களே.