டான் பிரியசாத் கைது

காலி­ மு­கத்­திடல் மற்றும் அல­ரி­ மா­ளி­கைக்கு அருகில் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் மீது தாக்­குதல் நடத்­தி­யமை தொடர்பில் டான் பிரி­யசாத் குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

உயர்நீதிமன்றம் செல்லாவிடின் நசீர் எம்.பி.யின் பாராளுமன்ற ஆசனம் 25 ஆம் திகதியோடு வறிதாகும்

மட்­டக்­க­ளப்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நசீர் அஹ­மடை கட்­சி­யி­லி­ருந்து நீக்­கி­யுள்­ளோம். அவர் உயர் நீதி­மன்­றத்­திற்கு செல்­லா­விடின் எதிர்­வரும் 25 ஆம் திக­தி­யுடன் அவரின் பாரா­ளு­மன்ற ஆசனம் வறிதா­கி­விடும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.

மாவனல்லை சிலை உடைப்பு வழக்கு: தண்டனைச் சட்டத்தின் கீழ் முன்னெடுக்க சட்டமா அதிபர் திணைக்களம் இணக்கம்

மாவ­னல்லை சிலை உடைப்பு சம்­ப­வத்தில் குற்­றச்­சாட்­டுக்­களை எதிர்­கொண்­டுள்ள 16 பேர் மீது பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் அன்றி தண்­டனைச் சட்­டக்­கோ­வையின் கீழ் வழக்­கு­களை முன்­னெ­டுக்க சட்­டமா அதிபர் திணைக்­களம் இணக்கம் தெரி­வித்­துள்­ள­தாக அறிய முடி­கி­றது.

அனைத்து பள்ளிவாசல்களிலும் ஜும்ஆ தொழுகை நடத்தலாம்

ஜும்ஆ தொழு­கையை மஸ்­ஜி­து­களில் மாத்­தி­ர­மல்ல மறு அறி­வித்தல் விடுக்­கப்­படும் வரை தக்­கி­யாக்கள் மற்றும் ஸாவி­யாக்­க­ளிலும் தொழ­மு­டியும் என வக்பு சபை தீர்­மானம் மேற்­கொண்­டுள்­ள­தாக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் இப்­றாஹிம் அன்ஸார் விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார்.