நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து கொண்டே செல்கிறது. பிரகடனப்படுத்தப்படாத முடக்க நிலை ஒன்றுக்கு நாடு முகங்கொடுத்துள்ளது.
இன்றைய பொருளாதார நெருக்கடிக்குப் பரிகாரம் காண்பதற்காகப் பல வழிகளிலும் சர்வகட்சி காபந்து அரசாங்கமும் அதனை ஆட்டுவிக்கும் ஜனாதிபதியும் முயற்சிக்கும் அதே வேளையில் சரிந்துகிடக்கும் இலங்கையுடனான அரபு நாடுகளின் உறவை கட்டியெழுப்ப வேண்டிய அவசியத்தைப் பற்றிச் சில சிந்தனைகளை விடிவெள்ளி வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதே இக்கட்டுரையின் நோக்கம்.
புத்தளம் - வணாத்தவில்லு, லக்டோஸ் தோட்டத்தில், வெடிபொருட்களை சேகரித்து களஞ்சியப்படுத்தும் மற்றும் உற்பத்தி செய்யும் இடமொன்றினை முன்னெடுத்துச் சென்றமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களில் தேசிய தௌஹீத் ஜமாஅத் எனும் தடை செய்யப்பட்ட அமைப்பின் முக்கியஸ்தரான நௌபர் மௌலவி உள்ளிட்ட 4 பிரதிவாதிகளுக்கு கடந்த திங்கட்கிழமை (27) பிணையளிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக மக்கள் பாரிய இன்னல்களை அனுபவித்து வருவதை நாம் அறிவோம். பொருட்களின் விலை அதிகரிப்பு, எரிபொருள் பற்றாக்குறை, போக்குவரத்து வசதிகள் இன்மை, தொழிலின்மை போன்ற பல்வேறு காரணங்களால் மக்கள் அன்றாடம் ஒரு வேளை உணவு உண்பதற்குக் கூட கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர்.