காரணம் கூறாமல் வக்பு சபையை இடைநிறுத்துவதை ஏற்க முடியாது
எந்தவித காரணங்களையும் தெரிவிக்காது வக்பு சபையின் பணிகளை இடைநிறுத்தம் செய்யும் வகையில் புத்தசாசன அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பானது ஏற்றுக் கொள்ள முடியாதது எனச் சுட்டிக்காட்டியுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.எம். ஸுஹைர், முஸ்லிம் விவகாரங்களில் தொடரும் தேவையற்ற தலையீடுகளின் மற்றொரு அங்கமாகவே இதனை நோக்க வேண்டியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.