தப்பியோடுபவர்களின் புகலிடமா துபாய்?

ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­பக்ச கடந்த வாரம் பொரு­ளா­தார மற்றும் அர­சியல் நெருக்­க­டியை எதிர்­கொண்டு நாட்டை விட்டு வெளி­யேற முயற்­சித்­த­போது, அவர் ஐக்­கிய அரபு எமி­ரேட்ஸை (யுஏஇ) தேர்ந்­தெ­டுத்­த­தாக தக­வல்கள் வெளி­யா­கின. தற்­போது அவர் சிங்­கப்­பூரில் தங்­கி­யி­ருக்­கின்ற போதிலும் விரைவில் அவர் ஐ.அ.எமி­ரேட்ஸை சென்­ற­டைவார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

பாராளுமன்றத்தில் ‘ஜனாதிபதி தேர்தல்’

வழக்­க­மாக ஜனா­தி­பதித் தேர்தல் வேறா­கவும் பாரா­ளு­மன்றத் தேர்தல் வேறா­கவும் நடப்­பது வழக்கம். இவ்­விரு தேர்­தல்­க­ளுக்­கு­மான வாக்­கெ­டுப்­புகள் நாட­ளா­விய ரீதியில் அனைத்துப் பகு­தி­க­ளிலும் இடம்­பெறும். ஆனால் இம்­மு­றைதான் முதல் தட­வை­யாக ஜனா­தி­பதித் தேர்தல் ஒன்று பாரா­ளு­மன்­றத்தில் இடம்­பெற்­றுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

28 இல் வக்பு சபை கூடுகிறது

புத்­த­சா­சனம், மத மற்றும் கலா­சார அலு­வல்கள் அமைச்சர் விதுர விக்­ர­ம­நா­யக்­க­வினால் வக்பு சபையின் அமர்­வு­கள் சில தினங்கள் இடை­நி­றுத்­தப்­பட்டு மீண்டும் அதன் பணி­களைத் தொடர்­வ­தற்கு அனு­மதி வழங்­கப்­பட்­ட­த­னை­ய­டுத்து வக்­பு­சபை கூட்டம் எதிர்­வரும் 28ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது.

இலங்கை யாத்திரிகர்கள் இருவர் மினாவில் மரணம்

இலங்­கை­யி­லி­ருந்து இவ்­வ­ருடம் ஹஜ் யாத்­திரை மேற்­கொண்­ட­வர்­களில் இருவர் யாத்­தி­ரையின் போது மினாவில் மர­ணித்­துள்­ளனர். அவர்­க­ளது ஜனா­ஸாக்கள் மக்­காவில் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டுள்­ளன.