ஆட்சி மாற்றமும் சிறுபான்மையினரும்
பல புள்ளிவிபரவியல் மற்றும் கணித 'விற்பன்னர்கள்' 'நிகழவே முடியாது' என சூளுரைத்த அந்த மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. அதேபோல, (தென்னிலங்கை சிங்களச் சமூகத்திற்கு மத்தியில் இடம்பெற்று வந்த மாற்றங்களை துல்லியமாக அவதானித்து வந்தவர்களை தவிர வேறு) எவரும் எதிர்பாராத விதத்தில் அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டிருக்கிறார்.