கடந்த பல மாதங்களாக தொடரும் எரிபொருள் பற்றாக்குறை கடந்த சில நாட்களாக தீவிரமடைந்துள்ளது. வாகனங்கள் எரிபொருளுக்காக நிற்கும் வரிசையின் நீளம் முன்னரை விட நீண்டு செல்கிறது. எரிவாயுவுக்கும் இதே நிலைதான்.
“சிறுபான்மை மக்களுக்கும், சிறுபான்மை கட்சிகளுக்கும் ஒரு பாதுகாப்பான முறையே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையாகும். இந்த ஜனாதிபதி முறையை முற்றாக மாற்றுவதனால் புதிய அரசியல் யாப்பு கொண்டுவரப்பட வேண்டும் என தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாவுல்லா தெரிவித்தார்.
ஹஜ் யாத்திரைக்காக சுமார் 4600 பேர் தலா 25 ஆயிரம் ரூபா பதிவுக்கட்டணம் செலுத்தி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் தங்களைப் பதிவு செய்து கொண்டிருந்தாலும் ஹஜ் கட்டண அதிகரிப்பின் காரணமாக இவ்வருடம் மக்கள் ஹஜ் கடமையில் ஆர்வம் குறைந்தவர்களாகவே இருக்கின்றனர்.
பொய்க் குற்றச்சாட்டுக்களின் பேரில் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்த காலப் பகுதிக்குரிய நிலுவை சம்பளப் பணத்தில், வைத்தியசாலைகளுக்குத் தேவையான அத்தியாவசிய மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்து வழங்க குருநாகல் போதனா வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அதிகாரி டாக்டர் ஷாபி சிஹாப்தீன் தீர்மானித்துள்ளார்.