இன, மதவாத கொள்கைக்கு எதிராக செயற்படுவேன்
பேதங்கள் மூலம் எமது நாடு முற்காலம் தொட்டு பின்னடைவுகளுக்கு உள்ளானது. அதிகாரத்தை பெற்றுக்கொள்வதற்காக சில தரப்பினர்கள் இப்பிரிவினை மேலும் விஸ்தரித்தனர். முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்கு இடையே பிரச்சினைகளை உருவாக்கியதுடன் தமிழ்ர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலும் குரோதங்களை தோற்றுவித்தனர். பிரிவுகளற்ற இலங்கையெனும் ஆளடையாளத்தைக் கொண்ட சமூகமொன்றினை உருவாக்க முயற்சித்ததால் நான், அரசியல் ரீதியாக தோல்விகளை சந்தித்தேன்.