தனியார் சட்ட விவகாரம் குறித்து கலந்துரையாடல்

முஸ்லிம் விவாக விவாகரத்துச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் பரிந்துரைகளை முன்வைப்பதற்கு முன்னாள் நீதியமைச்சர் அலிசப்ரியினால் நியமிக்கப்பட்ட குழு தற்போதைய நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை நீதியமைச்சில் சந்தித்து கலந்துரையாடியது. நீதியமைச்சரினால் இக்குழு கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டிருந்தது.

இலங்கையிலிருந்து முதலாவது ஹஜ் குழு 28 இல் சவூதி பயணம்

இலங்­கை­யி­லி­ருந்து எதிர்­வரும் 28 ஆம் திகதி முதல் தொகுதி ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் சவூதி அரே­பி­யா­வுக்குப் பய­ணிக்­க­வுள்­ளனர்.தொடர்ந்து 30ஆம் திகதி ஜூலை மாதம் 2ஆம், 3ஆம் திக­தி­களில் ஹஜ் யாத்­தி­ரி­கர்­களைச் சுமந்து கொண்டு விமா­னங்கள் சவூதி அரே­பி­யா­வுக்குச் செல்­ல­வுள்­ளன. இதற்­கான அனைத்து ஏற்­பா­டு­க­ளையும் ஹஜ் முகவர் நிலை­யங்கள்  பூர்த்தி செய்­துள்­ளன.

உலமா சபையின் தலைமை பொறுப்பை ஏற்க ஒருவாரகால அவகாசம் கோரினார் ரிஸ்வி முப்தி

"அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபையின் புதிய தலை­வ­ராக மீண்டும் நான் மூன்று வரு­ட­கா­லத்­துக்கு தெரிவு செய்­யப்­பட்­டுள்ளேன். அத்­தெ­ரிவு ஜன­நா­யக ரீதியில் இர­க­சிய வாக்­கெ­டுப்பின் மூலம் இடம்­பெற்­றது என்­றாலும் தலை­மைப்­ப­த­வியில் இருப்­பதா? இல்­லையா? என்று இஸ்­தி­காரா (Isthikhara) செய்து தீர்­மா­னிக்க உலமா சபையின் புதிய நிறை­வேற்­றுக்­கு­ழு­விடம் ஒரு­வா­ர­கால அவ­காசம் கோரி­யுள்ளேன்" என அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்­தார்.

ஆப்கானில் நிலநடுக்கம் 1000 பேர் வரை மரணம்

ஆப்­கா­னிஸ்­தானின் பக்­திகா மாகா­ணத்தில் நேற்று அதி­காலை ஏற்­பட்ட பாரிய நில­ந­டுக்­கத்தில் சிக்கி ஆயி­ரத்­துக்கும் அதி­க­மானோர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக அந்­நாட்டு தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.