புத்தளம் ஈன்ற மனிதநேயமிக்க பன்மைத்துவ ஆளுமை அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம்
இலங்கையின் ஆரம்பகால மத்ரஸாக்களுள் ஒன்றான புத்தளம் காஸிமிய்யா அறபுக் கல்லூரியில் மூன்று தசாப்த காலங்களுக்கும் மேலாக அதிபராகப் பணியாற்றிய அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்கள் 13.01.2025 அன்று கொழும்பு தனியார் வைத்தியசாலையில் காலமானார். அடுத்தநாள் புத்தளம் பகா மஸ்ஜித் மையவாடியில் இடம்பெற்ற ஜனாஸா நல்லடக்கத்தில் நாடெங்கிலுமிருந்து பெருந்தொகையானோர் கலந்துகொண்டனர்.