எதிர்த்தரப்புக்களின் முழு வீச்சிலான விஷமப் பிரசாரங்களை முறியடித்து, பொதுத் தேர்தலில் அமோக வெற்றியீட்டியதோடு, பாரம்பரிய வாரிசு அரசியலுக்கு தேசிய மக்கள் கட்சியினர் சமாதி கட்டியமை நாமறிந்ததே.
தேசிய மக்கள் சக்தியின் அமோக தேர்தல் வெற்றியையடுத்து, 'தகுதியும், திறமையும் வாய்ந்தவர்களின் தலைமையில் முன்னெடுக்கப்படும் ஆட்சி' (Meritocracy) எனப் பொதுவாக அழைக்கப்படும் ஓர் ஆட்சி முறையை நாடு முதல் தடவையாக பரீட்சித்துப் பார்க்கப் போகிறது.
கிழக்கு மாகாண அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் நியமனம் கடந்த டிசம்பர் 06ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகரவினால் மேற்கொள்ளப்பட்டது.