2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி நாட்டில் மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்பு பள்ளிவாசல்கள் மீதும் அரபுக்கல்லூரிகள் மற்றும் மத்ரஸாக்கள் மீதும் சந்தேகங்கள் ஏற்பட்டு அதிகாரிகளின் பரிந்துரைக்கமைய 16 பள்ளிவாசல்கள் மூடப்பட்டன. இவற்றில் 4 பள்ளிவாசல்கள் மீளத் திறக்கப்பட்டு விட்டன.
இலங்கையின் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் மோசமடைந்து செல்கின்ற நிலையில் அரசாங்கம் சர்வதேசத்தின் உதவியை நாடி நிற்கிறது. சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் துரிதமாக இடம்பெற்று வருகின்றன.