சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் சாய்ந்தமருது விலங்கறுமனை: வாக்குறுதியை நிறைவேற்றுமா கல்முனை மாநகர சபை?
சாய்ந்தமருது - வொலிவேரியன் கிராமத்திலுள்ள தனியாருக்கு சொந்தமான விலங்கறுமனை (மடுவம்) மூலம் சுற்றாடலுக்கு தீங்கு விளைவிக்கப்படுகின்ற அதேநேரம் குறித்த விலங்கறுமனை எந்தவித அனுமதிப் பத்திரங்களுமின்றி கடந்த பல வருடங்களாக இயங்கி வருகின்றமை தகவலறியும் சட்டத்தின் கீழ் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.