புதிய அரசியலமைப்பின் மாற்றங்கள் ஏற்படுத்தக் கூடிய திருப்பங்கள் என்ன?
சட்டங்களின் அடிப்படையை அரசியலமைப்பு என்று சொல்லுவார்கள். அந்தவகையில் அரசாங்கத்தை எவ்வாறு இயக்குவது என்ற ஒழுக்கக் கோவையாக அரசியலமைப்பைக் கருதலாம். அரசாங்கத்தை எடுத்துக் கொண்டால் அதில் நீதித்துறை நிர்வாகத் துறை மற்றும் சட்டவாக்கத் துறை என்ற மூன்று துறைகள் இருக்கின்றன. இந்த மூன்று துறைகளும் சுதந்திரமாகவும் நியாயமாகவும் இயங்குவதை உறுதி செய்வதே சுதந்திரம் ஆகும்.