ஹஜ் யாத்திரை விண்ணப்பங்கள் பதிவுக் கட்டணத்தை மீளவும் பெறமுடியும்
கடந்த வருடங்களில் ஹஜ் யாத்திரையை மேற்கொள்வதற்காக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கு விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து 25 ஆயிரம் ரூபா பதிவுக் கட்டணம் செலுத்தியுள்ளவர்கள் இதுவரை அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்திராவிட்டால் பதிவுக்கட்டணத்தை திணைக்களத்திடமிருந்து மீளப் பெற்றுக் கொள்ள முடியுமென அரச ஹஜ்குழு தெரிவித்துள்ளது.