ஒரு தசாப்தத்தின் பின் பாகிஸ்தான் சந்தித்துள்ள பெரு வெள்ளம்

பாகிஸ்­தானில் ஏற்­பட்­டி­ருக்கும் பாரிய வெள்ள அனர்த்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மில்­லியன் கணக்­கானோர் உதவி கோரி வரு­வ­தாக அந்­நாட்டின் அனர்த்த முகா­மைத்­துவ அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

அசரிகம பள்ளி நிர்வாகி படுகொலை: சம்பவம் தொடர்பிலான அறிக்கை இதுவரை வக்பு சபைக்கு கிடைக்கப்பெறவில்லை

அனு­ரா­த­புரம் அச­ரி­கம ஜும்ஆப் பள்­ளி­வாசல் நிர்­வா­கி­யொ­ருவர் அண்­மையில் சக நிர்­வா­கி­யொ­ரு­வரால் தாக்­கப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்­ட­தாகக் கூறப்­படும் சம்­பவம் தொடர்­பான அறிக்­கைகள் இது­வரை வக்பு சபைக்கு கிடைக்க பெற­வில்லை. அறிக்­கைகள் சம்­ப­வத்தை உறு­திப்­ப­டுத்­தினால் உட­ன­டி­யாக சம்­பந்­தப்­பட்ட பள்­ளி­வாசல் நிர்­வா­கிகள் பதவி நீக்கம் செய்­யப்­ப­டு­வார்கள். மேல­திக நட­வ­டிக்­கைகள் நீதி­மன்றம் மூலம் முன்­னெ­டுக்­கப்­படும் என வக்பு சபையின் தலைவர் சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்தீன் தெரி­வித்தார்.

கல்முனை நீதிமன்றில் நடந்தது என்ன? சாராவை மன்றின் முன் நிறுத்துங்கள்

உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்­கொலை தாக்­கு­தல்­களின் பிர­தான குண்­டு­தா­ரி­யாக சஹ்ரான் ஹஷீம் அறி­யப்­படும் நிலையில் , அவ­ரது மனைவி பாத்­திமா ஹாதி­யா­வுக்கு எதி­ராக தொட­ரப்­பட்­டுள்ள வழக்கில், கட்­டு­வா­பிட்டி தேவா­ல­யத்தில் குண்டை வெடிக்கச் செய்த மொஹம்­மது ஹஸ்­தூனின் மனை­வி­யான தற்­போதும் மர்­ம­மாக உள்ள சாரா ஜெஸ்மின் அல்­லது புலஸ்­தினி மகேந்ரன் நீதி­மன்றில் நிறுத்­தப்­பட வேண்டும் என சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் கல்­முனை மேல் நீதி­மன்றில் வாதிட்டார்.

பங்களாதேஷ் இலங்கைபோன்று நெருக்கடிக்கு முகம்கொடுக்காது

எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் பங்­க­ளாதேஷ் இலங்­கை­யைப்­போன்று பொரு­ளா­தார நெருக்­க­டிக்கு முகங்­கொ­டுக்­காது என்றும், தமது அர­சாங்கம் உரிய திட்­ட­மி­டலின் பிர­காரம் நாட்டை அபி­வி­ருத்தி செய்­வ­தா­கவும் பங்­க­ளாதேஷ் பிர­தமர் ஷேக் ஹஸீனா தெரி­வித்­துள்ளார்.